Thursday, March 16, 2023

ஒளி விழா

 


    யா/சிதம்பரக் கல்லூரியின் ஔிவிழா 22.10.2023அன்று கல்லூரி பிரதான மண்டபத்தில் இடம்பெற்றது. சிதம்பரக் கல்லூரி கிறிஸ்தவ மன்றத்தின் ஏற்பாட்டில் இடம்பெற்ற மேற்படி நிகழ்வில் செல்வி அ. அருள்சரணியா தலைமையுரையை நிகழ்த்தினார். ஆசியுரையை அருட்தந்தை யோசெப் பிரான்சிஸ் அவர்களும் வாழ்த்துரையை கல்லூரி அதிபர் திரு வே. பரமேஸ்வரன் அவர்களும் நிகழ்த்தினர். கல்லூரி மாணவர்களின் கலை நிகழ்ச்சிகளும் இடம்பெற்றன. ஒளிவிழாவையொட்டி நடாத்தப்பட்ட போட்டிகளுக்கான பரிசளிப்பும் இடம்பெற்றது. நன்றியுரையை கல்லூரி ஆசிரியை திருமதி ர. புஸ்பகாந்தன் அவர்கள் நிகழ்த்தினார். 


நிகழ்வுகளின் ஒளிப்படங்கள் 




























Sunday, March 12, 2023

யாழ். பல்கலைக்கழக ஓவியக் கண்காட்சியில்

 


யாழ்ப்பாணப் பல்கலைக்கழகம், ஐக்கியநாடுகள் வளர்ச்சித் திட்டத்துடன் இணைந்து  ஓவியக் கண்காட்சியை நடாத்தியது. “இலங்கையின் பொருளாதார நெருக்கடி பால்நிலைகளில் ஏற்படுத்தியுள்ள தாக்கங்கள்” என்னும் தொனிப்பொருளில் 24,25,26 பெப்ரவரி 2023 இல் நடாத்திய மேற்படி கண்காட்சிக்கு இலங்கையிலுள்ள பாடசாலை மாணவர்களாலும் பல்கலைக்கழக மாணவர்களாலும் வரையப்பட்ட 1925 ஓவியங்கள் காட்சிப்படுத்தப்பட்டன. சிதம்பரக் கல்லூரியிலிருந்தும் பல மாணவர்கள் இக்கண்காட்சிக்கென வரைந்த ஓவியங்களை அனுப்பி வைத்தனர். அதில் பங்குகொண்ட மாணவர்களுக்கு சான்றிதழ்கள் வழங்கப்பட்டன. 1925 ஓவியங்களிலிருந்து தெரிவுசெய்யப்பட்ட 50 ஓவியங்கள் தனியாகக் காட்சிப்படுத்தப்பட்டதோடு சிறப்புச் சான்றிதழ்களும் வழங்கப்பட்டன. அவ்வாறான சிறப்புச் சான்றிதழையும் தரம் 13 கலைப்பிரிவில் கல்வி கற்கும் செல்வன் செ. டிலக்சன் பெற்றுக்கொண்டார். இவர்களை வழிப்படுத்திய சித்திரபாட ஆசிரியர் ராகுலன் அவர்களுக்கும் பங்குகொண்டு சான்றிதழ்களைப் பெற்றுக்கொண்ட 17 மாணவர்களுக்கும் பாராட்டுக்களைத் தெரிவித்துக் கொள்கின்றோம்.  






















Monday, March 6, 2023

மாணவருக்கான விழிப்புணர்வுக் கருத்தரங்கு



   மூகத்தின் அபிவிருத்திக்கு அச்சுறுத்தலாக இருக்கும் போதைப்பொருட்கள் தொடர்பில் போதைக்கு எதிரான விழிப்புணர்வினை ஏற்படுத்தும் நோக்கில் யா/சிதம்பரக் கல்லூரியில் ஒரு கருத்தரங்கு ஏற்பாடு செய்யப்பட்டது. 12.01.2023 அன்று மேற்படி விழிப்புணர்வுக் கருத்தரங்கை வல்வெட்டித்தறைப் பிரதேசத்திற்கான பொதுச்சுகாதார பரிசோதகர் திரு யோ. சகிந்தன் நிகழ்த்தினார். மேற்படி நிகழ்வை கல்லூரி பிரதி அதிபர் திரு கு. மனோகரன் அவர்கள் தொடக்கி வைத்து உரையாற்றினார். தரம் 9,10,11 மாணவர்கள் இக்கருத்தரங்கில் பங்குபற்றினர். 

   மாணவர்களின் கற்றல், அவற்றுக்குத் தடையாக இருக்கும் காரணிகள், சமூகத்தில் ஒருவர் மதிக்கப்படுவதற்கான பண்புநலன்கள் தொடர்பில் மாணவர்களிடமிருந்தே வினாக்களை வினாவி அவர்களிடமிருந்தே விடைகளையும் வருவித்து மாணவர்களையும் பங்குபற்றுநர்களாக்கியதாக இக்கருத்தரங்கு அமைந்தது. 






Wednesday, March 1, 2023

நிறுவுநர் தினமும் பரிசளிப்பு விழாவும்

 

யா /சிதம்பரக் கல்லூரி நிறுவுநர் தினமும் பரிசளிப்பு விழாவும் 11.11.2022 அன்று கல்லூரி அதிபர் வேல்விநாயகம் பரமேஸ்வரன் தலைமையில் இடம்பெற்றது. மேற்படி விழாவில் பிரதம விருந்தினராக யாழ்ப்பாணப் பல்கலைக்கழக மருத்துவபீட சிரேஸ்ட விரிவுரையாளரும் கல்லூரியின் பழைய மாணவியுமாகிய டாக்டர் வளர்மதி அம்பலவாணர் அவர்களும் சிறப்பு விருந்தினராக புத்தூர் ஶ்ரீசோமஸ்கந்த கல்லூரி உதவி அதிபர் திரு அ. பகீரதன் அவர்களும் கலந்து சிறப்பித்தனர்.  நிறுவுநர்தின உரையை ஓய்வுநிலை அதிபர், கல்லூரியில் பழைய மாணவர் திரு பூ. சக்திவேல் அவர்கள் நிகழ்த்தினார். கல்வி மற்றும் இணைபாடவிதானச் செயற்பாடுகளில் திறமையை வெளிப்படுத்திய மாணவர்களுக்கு பரிசில்கள் வழங்கப்பட்டன.  மாணவர்களின் கலை நிகழ்வுகளும் இடம்பெற்றன.