யாழ்ப்பாணப் பல்கலைக்கழகம், ஐக்கியநாடுகள் வளர்ச்சித்
திட்டத்துடன் இணைந்து ஓவியக் கண்காட்சியை நடாத்தியது.
“இலங்கையின் பொருளாதார நெருக்கடி பால்நிலைகளில் ஏற்படுத்தியுள்ள தாக்கங்கள்” என்னும்
தொனிப்பொருளில் 24,25,26 பெப்ரவரி 2023 இல் நடாத்திய மேற்படி கண்காட்சிக்கு இலங்கையிலுள்ள
பாடசாலை மாணவர்களாலும் பல்கலைக்கழக மாணவர்களாலும் வரையப்பட்ட 1925 ஓவியங்கள் காட்சிப்படுத்தப்பட்டன.
சிதம்பரக் கல்லூரியிலிருந்தும் பல மாணவர்கள் இக்கண்காட்சிக்கென வரைந்த ஓவியங்களை அனுப்பி
வைத்தனர். அதில் பங்குகொண்ட மாணவர்களுக்கு சான்றிதழ்கள் வழங்கப்பட்டன. 1925 ஓவியங்களிலிருந்து
தெரிவுசெய்யப்பட்ட 50 ஓவியங்கள் தனியாகக் காட்சிப்படுத்தப்பட்டதோடு சிறப்புச் சான்றிதழ்களும்
வழங்கப்பட்டன. அவ்வாறான சிறப்புச் சான்றிதழையும் தரம் 13 கலைப்பிரிவில் கல்வி கற்கும்
செல்வன் செ. டிலக்சன் பெற்றுக்கொண்டார். இவர்களை வழிப்படுத்திய சித்திரபாட ஆசிரியர்
ராகுலன் அவர்களுக்கும் பங்குகொண்டு சான்றிதழ்களைப் பெற்றுக்கொண்ட 17 மாணவர்களுக்கும்
பாராட்டுக்களைத் தெரிவித்துக் கொள்கின்றோம்.















No comments:
Post a Comment