Monday, March 18, 2024

சிதம்பரக் கல்லூரியின் பழைய மாணவர் சங்கத்தினரால் கற்றல் உபகரணங்கள் வழங்கிவைப்பு

 


யா/சிதம்பரக் கல்லூரியின் பழைய மாணவர் சங்கத்தினர் கல்லூரியில் தரம் 1 முதல் தரம் 13 வரை கற்கும்  மாணவர்களுக்கு ஒரு தொகுதி கற்றல் உபகரணங்களை கல்லூரி அதிபர் திரு வே.பரமேஸ்வரன் அவர்களிடம் கையளித்தனர். அவை வகுப்பாசிரியர்கள் ஊடாக மாணவர்களுக்குப் பகிர்ந்தளிக்கப்பட்டன. 

இந்நிகழ்வில் சிதம்பரக் கல்லூரி பழைய மாணவர் சங்கத் தலைவர் திரு. எஸ் சிறீபதி அவர்கள் கலந்துகொண்டார்.

கல்லூரியின் பழைய மாணவர் வேலுப்பிள்ளை பாஸ்கரசுந்தரம் அவர்களின் 100,000/- ரூபா நிதிப்பங்களிப்பிலும் பழைய மாணவர் சங்கத்தின் 223,000/- ரூபா நிதிப்பங்களிப்பிலும் இந்த கற்றல் உபகரணங்கள் கொள்வனவு செய்யப்பட்டு வழங்கப்பட்டன. இவர்களுக்கு பாடசாலைச் சமூகம் நன்றியைத் தெரிவித்துக் கொள்கிறது.


























Monday, March 11, 2024

சிதம்பரக் கல்லூரியின் வருடாந்த இல்ல மெய்வன்மைப் போட்டிகள் - 2024

 


யா/சிதம்பரக் கல்லூரியின் வருடாந்த இல்ல மெய்வன்மைப் போட்டிகள் 10.03.2024 ஞாயிற்றுக்கிழமை இடம்பெற்றன. கல்லூரி அதிபர் திரு வே. பரமேஸ்வரன் தலைமையில் இடம்பெற்ற நிகழ்ச்சியில் பிரதம விருந்தினராக சிங்கப்பூர் தேசிய பல்கலைக்கழகத்தின் ஓய்வுநிலைப் பேராசிரியர் கலாநிதி சபா ராஜேந்திரன் அவர்கள் கலந்து சிறப்பித்தார். தையற்பாகர், சிதம்பரப்பிள்ளை, ஐயங்கார் ஆகியோரின் பெயர்களைத் தாங்கிய இல்லங்களில் இவ்வருடம் தையற்பாகர் இல்லம் (சிவப்பு) முதலாம் இடத்தைப்பெற்றுக்கொண்டது. பாடசாலைச் சமூகத்தின் நிறைந்த ஒத்துழைப்புடன் மிகச்சிறப்பாக இவ்வருட மெய்வன்மைப்போட்டிகள் நிறைவு பெற்றன. 

நிகழ்விலிருந்து சில ஒளிப்படங்கள் 

(படங்கள் : டிலக்சன், குணேஸ், ராகுலன்)