Thursday, November 16, 2023

மாணவர் பாராளுமன்றம் – 2023

 


யா/ சிதம்பரக் கல்லூரியின் மாணவர் பாராளுமன்றத்தின் முதலாவது அமர்வு 13.10.2023 வெள்ளிக்கிழமை காலை 8.00 மணியளவில் கல்லூரி மண்டபத்தில் இடம்பெற்றது.

முதல் நிகழ்வாக விருந்தினர் அழைப்பு இடம்பெற்றது. தொடர்ந்து தேசியக் கொடியை பிரதம விருந்தினராகக் கலந்து சிறப்பித்த திரு எஸ்.உதயநாதன் (சமூக விஞ்ஞான பாட சேவைக்கால ஆசிரிய ஆலோசகர், வடமராட்சி வலயம்) அவர்களும் பாடசாலைக் கொடியை கல்லூரி அதிபர் திரு வே. பரமேஸ்வரன் அவர்களும் ஏற்றி வைத்தனர். தொடர்ந்து மங்கல விளக்கேற்றலும் இறைவணக்கமும் இடம்பெற்றன.

மாணவர் பாராளுமன்றச் செயலாளர் நாயகம் அதிபர் அவர்களால் இப்பாராளுமன்றுக்குரிய சபாநாயகர் தெரிவு அறிவிக்கப்பட்டது.  சபாநாயகரான செல்வன் எஸ்.சன்னகாசன் என்ற மாணவன் தெரிவு செய்யப்பட்டதை அறிவித்தார். அப்போது சபாநாயகர் செங்கோலுடன் சபைக்கு அழைத்து வரப்பட்டார். தொடர்ந்து சபாநாயகரின் சத்தியப்பிரமாணம் இடம்பெற்றது.

சபாநாயகர் அவர்களால் பிரதி சபாநாயகர், பிரதமர், முதல்வர், குழுத்தலைவர்கள் ஆகியோரின்  தெரிவு விபரங்கள் அறிவிக்கப்பட்டன. பிரதி சபாநாயகராக செல்வி பா. வினோஜா, பிரதமராக செல்வன் கோ. நிலக்சன், சபை முதல்வராக செல்வன் யோ. கோபிசாந், குழுத்தலைவராக செல்வன் வி. விதுஸன் ஆகியோர் அறிவிக்கப்பட்டனர். தொடர்ந்து அமைச்சர்கள், பிரதி அமைச்சர்கள்  தெரிவு விபரம் அறிவிக்கப்பட்டது.

தெரிவு செய்யப்பட்டவர்கள் சத்தியப்பிரமாணம் எடுத்தல் செயற்பாட்டை மேற்கொண்டனர். அதனைத் தொடர்ந்து தமது அறிமுக உரைகளை நிகழ்த்தினர். தொடர்ந்து சபாநாயகர், முதல்வர் ஆகியோரின் கருத்துக்கள்  இடம்பெற்றன.

மேற்படி நிகழ்வு தொடர்பாக அதிபர் அவர்களின் வாழ்த்துரை இடம்பெற்றது. பிரதம விருந்தினராகக் கலந்து கொண்ட திரு. எஸ்.உதயநாதன் அவர்கள் மாணவர்கள் எவ்வாறு செயற்படவேண்டும் என்பது தொடர்பான ஆலோசனையை வழங்கினார்.  இறுதியாக பிரதி அதிபர் திரு கு. மனோகரன் அவர்களின் நன்றியுரையுடன் மாணவர் பாராளுமன்ற நிகழ்வுகள் நிறைவு பெற்றன.

பதிவு :திருமதி சுமித்திரா(ஆசிரியர்) : ஒளிப்படங்கள் : திரு சி. சிவதாஸ் (ஆசிரியர்)

நிகழ்விலிருந்து சில ஒளிப்படங்கள் 













































வாணி விழா - 2023


யா/ சிதம்பரக் கல்லூரியின் வாணிவிழா நிகழ்வுகள் 24.10.2023 அன்று கல்லூரி பிரதான மண்டபத்தில் இந்துமாமன்றத் தலைவர் செல்வி த. தர்சிகா தலைமையில் இடம்பெற்றன. கல்லூரி அதிபர் திரு வே. பரமேஸ்வரன் அவர்களின் ஆசியுரையுடன் இடம்பெற்ற இந்நிகழ்வில் மாணவர்களின் கலை நிகழ்ச்சிகள் இடம்பெற்றன. நிகழ்விலிருந்து சில ஒளிப்படங்கள். 

ஒளிப்படங்கள்  : திரு த.ரூபரஞ்சன் (ஆசிரியர்)