யா/சிதம்பரக் கல்லூரியின் பரிசளிப்பு விழாவும் நிறுவுநர் தினமும் 07.11.2025 வெள்ளிக்கிழமை, கல்லூரி அதிபர் திரு. வேல்விநாயகம் பரமேஸ்வரன் அவர்கள் தலைமையில் இடம்பெற்றது. நிகழ்வுக்கு கல்லூரியின் பழைய மாணவரும் முன்னைநாள் அதிபருமாகிய திரு. நடராஜா அரியரத்தினம் அவர்கள் பிரதம விருந்தினராகக் கலந்து சிறப்பித்தார். வரவேற்புரையை ஆரம்பக் கல்விக்கான பகுதித்தலைவர் திருமதி சி. சிவபாஸ்கரன் நிகழ்த்தினார். நிறுவுநர் உரையை கல்லூரியின் பழைய மாணவராகிய திரு தி. முரளிதரன் நிகழ்த்தினார். பாண்ட் வாத்திய அணிவகுப்புடன் தொடங்கிய நிகழ்வில் கொடியேற்றம், மங்கல விளக்கேற்றல், உரைகள் , மாணவர்களின் கலை நிகழ்ச்சிகள், பரிசில் வழங்கல், கௌரவிப்பு ஆகியன இடம்பெற்றன. அதிபர் அவர்கள் பரிசில்தின அறிக்கையைச் சமர்ப்பித்து உரை நிகழ்த்தினார். பிரதம விருந்தினர் அவர்கள் பரிசில்களை வழங்கி உரை நிகழ்த்தினார். பழைய மாணவர் சங்கத்தின் அனுசரணையில் இடம்பெற்ற மேற்படி நிகழ்வில் நன்றியுரையை கல்லூரி பிரதி அதிபர் திரு. குண்டுமணி மனோகரன் நிகழ்த்தினார்.


























































