Wednesday, July 23, 2025

மாணவர் வகுப்பறைச் செயற்பாடுகளில் இருந்து...

தரம் 7 மாணவர்களின் உணவுக்கூம்பகம்














மாகாணமட்ட 'பளு தூக்குதல்'

 மாகாணமட்ட 'பளு தூக்குதல்' (Weight lifting) போட்டியில் வெற்றி பெற்ற மாணவர்களைப் பாராட்டுகின்றோம்.

யா/சிதம்பரக்கல்லூரி மாணவர்கள் இருவர் மாகாண மட்ட பளு தூக்குதல் போட்டியில் வெற்றி பெற்றிருக்கிறார்கள். 17 வயதுப்பிரிவில் செல்வன் K. ஹரிகரன் இரண்டாம் இடத்தையும் அதேபிரிவில் செல்வி E. கிருஷாந்தி மூன்றாம் இடத்தையும் பெற்றிருக்கிறார்கள். அவர்களை வழிப்படுத்திய கல்லூரியின் உடற்கல்வி ஆசிரியர் திரு K.கோபிநாத் மற்றும் பயிற்சியளித்த கல்லூரி ஆசிரியர் திரு இ. அபினேஸ் ஆகியோரையும் வெற்றிபெற்று சான்றிதழ்களைப் பெற்றுக்கொண்ட மாணவர்களையும் பாராட்டி வாழ்த்துகின்றோம்.








மடிக்கணினி அன்பளிப்பு

 


யா/ சிதம்பரக் கல்லூரி மாணவி செல்வி ஹரிதாஸ் கிருஷாயினி அவர்களுக்கு, கடந்த வருடம் இடம்பெற்ற க.பொ.த உயர்தரப் பரீட்சையில் கணிதப் பிரிவில் சிறந்த பெறுபேற்றைப் பெற்றமையை ஊக்குவிக்கும் பொருட்டு கல்லூரி பழைய மாணவர் திரு தி. முரளிதரனின் வேண்டுகோளுக்கமைய அவுஸ்திரேலியாவில் வதியும் கல்லூரி பழைய மாணவர் திரு எஸ். சிறிசண்முகநாதன் அவர்களால் ஒரு மடிக்கணினி அன்பளிப்பாக வழங்கப்பட்டது. இம்முயற்சியில் இணைந்த வர்களுக்கு கல்லூரிச் சமூகம் நன்றியைத் தெரிவித்துக் கொள்கிறது.

மாணவர் பாராளுமன்றம்

 

யா/சிதம்பரக் கல்லூரியின் மாணவர் பாராளுமன்றம் 04.07.2025 அன்று கல்லூரி மண்டபத்தில் கல்லூரி அதிபர் திரு வே. பரமேஸ்வரன் அவர்கள் தலைமையில் இடம்பெற்றது. இந்நிகழ்வுக்கு பிரதம விருந்தினராக திரு எஸ்.எம் கண்ணகுமார் (ஆசிரிய வளவாளர், சமூக விஞ்ஞானம், வடமராட்சி வலயம்) அவர்கள் கலந்து சிறப்பித்தார்.

ஒளிப்படங்கள் : Sivananthapragas & Kunes