Wednesday, June 25, 2025

ஆரம்பக்கல்வி மாணவர்களின் மாதிரி சிறுவர் சந்தை


யா/சிதம்பரக் கல்லூரி ஆரம்பக்கல்வி மாணவர்களின் மாதிரி சிறுவர் சந்தை அண்மையில் கல்லூரியில் இடம்பெற்றது. அந்நிகழ்வின்போதான ஒளிப் படங்கள் சிலவற்றைத் தருகின்றோம். 
































Monday, June 9, 2025

குடிநீர் சுத்திகரிப்புத் தொகுதி அமைக்கப்பட்டது

 


யா/சிதம்பரக்கல்லூரி பழைய மாணவர் சங்கத்தின் வேண்டுகோளின்பேரில் கல்லூரியின் பழைய மாணவர்கள் திரு. திருமதி பிறேமதாஸ் ஜெயராணி (1971, O/L Batch) அவர்களின் நிதி அநுசரணையில் குடிநீர் சுத்திகரிப்புத் தொகுதி 08.06.2025 அன்று அமைக்கப்பட்டது. ரூபா இரண்டு இலட்சம் பெறுமதியில் அமைக்கப்பட்ட இக்குடிநீர் சுத்திகரிப்புத் தொகுதியூடாக கல்லூரி மாணவர்களும் ஆசிரியர்களும் சுத்திகரிக்கப்பட்ட குடிநீரைப் பெறக்கூடியதாக இருக்கும். இதற்கு உதவிய அனைவருக்கும் கல்லூரிச் சமூகம் நன்றியைத் தெரிவித்துக் கொள்கிறது.






கடற்கரைக் கரப்பந்தாட்டத்தில் (Beach Volleyball) சம்பியன்

 


வடமராட்சி வலயமட்ட பெருவிளையாட்டு - கடற்கரைக் கரப்பந்தாட்டத்தில் (Beach Volleyball) யா/சிதம்பரக் கல்லூரியின் 20 வயதுப் பிரிவு அணியினர் 1ஆம் இடத்தைப்பெற்று சம்பியனாகியுள்ளனர். யா/உடுப்பிட்டிஅமெரிக்கன் மிஷன் கல்லூரி அணியுடனான இறுதியாட்டத்தில் வெற்றிபெற்று சம்பியனாகி மாகாணமட்டப் போட்டிக்குத் தகுதி பெற்றுள்ளனர். கல்லூரி அணியினரையும் அவர்களைப் பயிற்றுவித்து வழிப்படுத்திய உடற்கல்வி ஆசிரியர் மற்றும் பொறுப்பாசிரியர்களையும் வாழ்த்துவதில் மகிழ்ச்சியடைகின்றோம்.



Thursday, June 5, 2025

கரப்பந்தாட்டத்தில் ...

 யா/சிதம்பரக்கல்லூரி

வலயமட்ட பெருவிளையாட்டு கரப்பந்தாட்டத்தில் யா/ சிதம்பரக் கல்லூரி 20 வயதுப் பிரிவு அணியினர் வெற்றிபெற்று, மாகாணமட்டப் போட்டியில் பங்குபற்றத் தகுதி பெற்றுள்ளனர். மாணவர்களுக்கும் பொறுப்பாசிரியர் மற்றும் பயிற்றுவிப்பாளர்களுக்கும் வாழ்த்துகள்.



சூழல்நேயச் செயற்பாடுகளில்...

 யா/சிதம்பரக் கல்லூரி

பிளாஸ்ரிக் பொருட்களைச் சேகரிப்பதிலும் அவற்றை அப்புறப்படுத்துவதிலும் கல்லூரி மாணவர்கள் ஈடுபட்டனர்.