Friday, November 22, 2024

சிதம்பரக் கல்லூரியின் பரிசளிப்பு விழா

 யா/ சிதம்பரக் கல்லூரியின் பரிசளிப்பு விழா கல்லூரி அதிபர் திரு வே.பரமேஸ்வரன் தலைமையில் 22.11.2024 அன்று கல்லூரியின் பிரதான மண்டபத்தில் இடம்பெற்றது. இவ்விழாவில் கல்லூரியின் பழைய மாணவனும் துணுக்காய் பிரதேச செயலருமாகிய திரு ராமதாஸ் ரமேஸ் அவர்கள் கலந்து சிறப்பித்தார். விழாவில் வரவேற்புரையை ஆசிரியர் சு. குணேஸ்வரனும் பரிசில் தின அறிக்கை மற்றும் உரையை கல்லூரி அதிபர் திரு வே.பரமேஸ்வரன் அவர்களும் விருந்தினர் உரையை துணுக்காய் பிரதேச செயலர் திரு ராமதாஸ் ரமேஸ் அவர்களும் நன்றியுரை கல்லூரி பிரதி அதிபர் திரு கு, மனோகரன் அவர்களும் நிகழ்த்தினர்.

வரவேற்பு நடனம், கிராமிய நடனம், அபிநயப்பாடல், குழுப்பாடல், பேச்சு, அபிநயத்துடன் கூடிய மீனவர் பாடல், வில்லுப்பாட்டு முதலான மாணவர்களின் கலை நிகழ்ச்சிகள் இடம்பெற்றன. பாடரீதியான பரிசில்கள், 2023 ஆம் ஆண்டுக்கான புலமைப் பரிசில்கள், மாணவர்களுக்கான ஊக்குவிப்புப் பரிசில்கள், இணைபாடவிதான செயற்பாடுகளுக்கான பரிசில்கள் வழங்கி மாணவர்கள் ஊக்குவிக்கப்பட்டனர்.

பதிவும் படங்களும் : சு.குணேஸ்வரன்