Sunday, October 20, 2024

பாராட்டி வாழ்த்துகின்றோம்

 


வடக்கு மாகாண மட்டத்தில் நடைபெற்ற புத்தாக்கப் போட்டியில் யா/சிதம்பரக் கல்லூரி மாணவன் செல்வன் சித்திரவேல் சரவணன் பங்குபற்றி Production Industry & Environmental Studies பிரிவில் மாகாணமட்டத்தில் இரண்டாம் இடத்தைப் பெற்றுள்ளார். மாணவனுக்கும் அவரை வழிப்படுத்திய ஆசிரியர்களுக்கும் வாழ்த்துகள்.






Monday, October 7, 2024

சிதம்பரக் கல்லூரியின் ஆசிரியர்தின விழா

 


யா /சிதம்பரக் கல்லூரியின் ஆசிரியர்தினம் 07.10.2024 அன்று கல்லூரியின் பிரதான மண்டபத்தில் இடம்பெற்றது.  மேற்படி நிகழ்வு சிரேஸ்ட மாணவர் தலைவன் செல்வன் கீ. கீர்த்திகன் தலைமையில் இடம்பெற்றது. ஆசிரியர்களை மாலையிட்டு வரவேற்று, கல்லூரி முகப்பிலிருந்து மண்பத்திற்கு மாணவர்கள் அழைத்து வந்தனர். தொடர்ந்து நிகழ்வுகள் இடம்பெற்றன. நிகழ்வில் வாழ்த்துரையை கல்லூரி அதிபர் திரு வே. பரமேஸ்வரன் அவர்கள் நிகழ்த்தினார். ஆசிரியர்களினதும் மாணவர்களினதும் கலை நிகழ்வுகள் இடம்பெற்றன. 


























Tuesday, October 1, 2024

சிறுவர் தின விழா

 



யா /சிதம்பரக் கல்லூரியின் சிறுவர் தின விழா 01.10.2024  செவ்வாய்க்கிழமை காலை, கல்லூரியின்பிரதான மண்டபத்தில் கல்லூரி அதிபர் வே. பரமேஸ்வரன் அவர்களின் தலைமையில் இடம்பெற்றது. பிள்ளைகளைப் பாதுகாப்போம். சமமாக மதிப்போம். என்ற இவ்வருடத்திற்கான கருப்பொருளைக் கொண்ட சிறுவர் தினத்தில் தொடக்கவுரையை ஆசிரியர் சு. குணேஸ்வரனும் சிறப்புரையை ஆசிரியர் k.சுதர்சனும் நிகழ்த்தினர்.  மாணவர்களின் கலைநிகழ்வுகளான கும்மி , கோலாட்டம், இசைவும் அசைவும், பேச்சு, குழுப்பாடல் ஆகியன இடம்பெற்றன. நிறைவுரையை சிரேஸ்ட ஆசிரியர் k.தட்சணாமூர்த்தி நிகழ்த்தினார்.  அதிபர், ஆசிரியர், ஊழியர் நலன்புரிச் சங்கத்தின் ஏற்பாட்டில் மேற்படி நிகழ்வு இடம்பெற்றது.