யா/சிதம்பரக் கல்லூரி மாணவர்களில் ஒரு தொகுதியினர் அண்மையில் கல்விச் சுற்றுலா ஒன்றை மேற்கொண்டனர். தீவளாவிய இச்சுற்றுலாவிற்கு சிதம்பரக் கல்லூரி பழைய மாணவர்கள் அனுசரணை வழங்கியிருந்தனர்.
இச்சுற்றுலாவிற்கு தரம் 11-13 வரையான மாணவர்களும் அதிபர் உட்பட ஆசிரியர்களில் ஒரு பகுதியினரும் இணைந்திருந்தனர். வணக்க தலங்கள், பிரசித்தி பெற்ற இடங்கள், மரபுரிமைச் சின்னங்கள், சூழலில் முக்கியத்துவமிக்க இடங்கள், உயர் கல்வி நிறுவனங்கள், தொழிற்தளங்கள் முதலானவற்றைப் பார்வையிட்டனர்.
சில ஒளிப்படங்கள்







































